Subscription Service

All Ads in Tamil

மல்லி விவசாயிகளின் சரக்கு வரத்தில் குறைவு - விலை நிலைப்பு

ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத்தில் நடப்பு ஆண்டு உற்பத்தியில் குறைவு மற்றும் பருவ ஆரம்பத்திலிருந்தே விலையில் விவசாயிகளின் தொடர் விற்பனையால் தற்போது வரத்து குறைந்துவிட்டது. உயர்வு ஏற்பட்டதால்ஆனால் வாய்தாவில் ஏற்ற, இறக்கம் மற்றும் தென்னிந்திய வியாபாரிகளின் தேவைக்கு ஏற்ப கொள் முதலால் விலையில் 400-500 ரூபாய் வரை குறைவு ஏற்பட்டது. ஆனால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம் அதிகப்படியான சரக்கு வியாபாரி களின் கையில் உள்ளது.சென்ற வாரம் என்.சி.டி. ஈ.எக்சில் மல்லி மே வாய்தா ஒரு வாரத்திற்கு முன்பு 13,500 ஆக இருந்தது 528 குறைந்து திங்களன்று 12,972 ரூபாயில் ஆரம்பமான பிறகு வியாழன் அன்று 12,728 ரூபாயில் முடிவுபெற்றது. மேலும் ஜூன் வாய்தா 13,050 ரூபாயில் ஆரம்பமான பிறகு 204 குறைந்து 12,846,ராஜஸ்தான் மாநில ராம்கன்ஜ் மண்டி, கோட்டா, பாரன் மற்றும் சுற்றுவட்டார சிறிய மண்டியில் சேர்ந்து எதிர் பார்த்தபடி 50-60 ஆயிரம் மூட்டைகள் வரத்தில்

Updated On: May 3, 2026, 8:17 pm
மிளகாய் இருப்பில் ஏகக்குறைவு - எதிர்காலத்தில் விலை உயர வாய்ப்பு

ஹைதராபாத் :- கிடைத்த செய்திகளின்படி நடப்புஆண்டு மிளகாய் உற்பத்தியில் குறைவு மற்றும் விலையில் ஏக உயர்வால் விவசாயிகள் உற்பத்தியாகும் மொத்த சரக்கையும் விற்பனை செய்கிறார்கள். மேலும் பருவத்தில் புகையிலை, பருத்தி, தானியம் போன்ற வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப் பட்ட சரக்கையும் ஏசி கிட்டங்கியிலிருந்து எடுத்து லாபத்தில் வசூல் செய்கிறார்கள். மேலும் சரக்கு வெளி மாநிலங்களுக்குச்செல்கிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுவதால் ஏற்றுமதியில் குறைவு ஏற்பட்ட போதும் குண்டூர் ஏசி கிட்டங்கியில் மே மாத நடுவாக்கில் இருப்பு சென்ற ஆண்டு 70 லட்சம் மூட்டையாக இருந்தது தற்போது 40 லட்சம் மூட்டைகள் இருப்பு உள்ளது. மே மாத நடுவாக்கில் 8-10 லட்சம் மூட்டைகள் மேலும் இருப்பாக லாம். இந்த நிலையில் சென்ற ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டு சேர்ந்து மொத்த இருப்பு சென்ற ஆண்டை விட 20 லட்சம் மூட்டைகள் குறைந்து 50 லட்சம் மூட்டை களுக்கும் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. இதில் 334 மற்றும் சூப்பர்-10 ரகத்தின் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிரகாசம் ஜில்லாவின் பர்ச்சூர், உங்கோலுவட்டாரங்களில் நெ.5 புதிய சிவப்பு வத்தல் வருகிறது. பயிர் மகசூல் மற்றும் நிறமாக இருப்பதால் கிழக்கு ஆந்திர தாடேபள்ளிக்கூடம், ஸ்ரீ காகுளம், விஜயநகரம் வட்டாரங்களுக்காக கவுன்ட்டர் சேல்க்குச்செல்கிறது. ஆந்திர நெல்லூர் ஜில்லாவின் கந்துக்கூர், காவலி, பிரகாசம் ஜில்லாவின் தர்சி, பொதிலி, பாதாபாடு, கனிகரி பகுதியில் தற்சமயம் முதல் பறிப்பு தேஜா வத்தல் வருகிறது. ஜூன் வரை வரத்து இருக்கலாம். பயிர் மகசூல் ஏக்கருக்கு 30 குவின்டல் வரை வருகிறது. மேலும் தேஜா இருப்பு 15 லட்சம் மூட்டைகளுக்கும் அதிகமாக இருக்காது. வியாபாரிகளின் கணிப்புப்படி நடப்பு ஆண்டு தேஜாவிலை உயர்ந்து 25,000 ரூபாய் வரை ஆகலாம். மேலும் எல்நினோ தாக்கத்தால் மழையில் குறைவு, ஏற்றுமதிக் கான தேவை ஏற்பட்டால் விலையில் மேலும் உயர்வு ஏற்படலாம். குண்டூர் மண்டியில் சென்ற வாரம் 4 நாட் களில் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், பலநாடு மற்றும் தெலங்கானாவின் பத்ராவதி, கொத்தகுடம் பகுதி யிலிருந்து 3,60,000 மூட்டைகள் வருவதோடு மண்டி யார்டில் இருப்பு உட்பட 4,20,000 மூட்டைகள் வரத்தில் டீலக்ஸ் ரகச்சரக்கு வரத்து குறைவால் விலை நிலைத்து விட்டது. ஆனால் நடுத்தரம், நடுத்தர நயம் சரக்கு அதிக வரத்தால் 500 ரூபாய் வரை குறைவு ஏற்பட்டது. தூள் ரக டிடி, 341, நெ.5, 2043 பேட்கி, சின்ஜேட்டா பேட்கி, 355 பேட்கி, 334, சூப்பர்-10 ரகத்தின் விலை நிலையாக இருந்தது.குண்டூர் ஏசி கிட்டங்கியில் 2 மாதத்திற்கு முன்பு இருப்பு வைக்கப்பட்ட சரக்கு விற்பனையாகிறது. இதில் 2043 की एक ພໍ 33,000-36,000, 341 एक 20,000-22,000, 20,000-21,000, 20,000 -21,000 ரூபாய் வரை விற்பனையாகியது.

Updated On: May 3, 2026, 8:16 pm
குஜராத்தில் புதிய உளுந்து வரத்து தேசீய அளவில் சப்ளை உயர வாய்ப்பு

ஹைதராபாத் :- சர்வதேச மார்க்கெட்டில் மியான்மர்உளுந்து 5-10 டாலர் குறைந்து எப்.ஏ.க்யூ 840 டாலர், எஸ்.க்யூ 930 டாலர் டன் வரை சி அண்டு எப் கூறப் படுவதால் மும்பையில் எப்.ஏ.க்யூ விலை 200 குறைந்து 7950, சென்னையில் எஸ்.க்யூ 8550, எப்.ஏ.க்யூ 7875, பிரேசில் சரக்கு 8300 வரையும் வியாபாரமாகியது. குஜராத்தின் பாட்டன் பகுதியில் புதிய சரக்கு வரத்து ஆரம்பமாகிவிட்டது. இதனால் மில்லர்ஸ் தேவைக்கு ஏற்ப கொள்முதலால் விலை நிலைத்துவிட்டது. வியாபாரிகளின் கணிப்புப்படி கோடைகால பருவ உளுந்து விதைப்பு சென்ற ஆண்டை விட ஏறக்குறைய 1 லட்சம் எக்டாருக்கும் அதிகமாக ஆகியது. மியான்மரில் பம்பர் விளைச்சலால் வெளி நாட்டு ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து விலையை குறைத்து கூறிவருகிறார்கள். வேளாண் மந்திராலய கணிப்புப்படி நாட்டில் கோடை கால பருவத்தில் 24,ஏப்ரல் வரை உளுந்து விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 2,75.000 ஆக இருந்தது 3,72,000 எக்டாராகியது. அது சென்ற ஆண்டு கோடை கால பருவ விதைப்பு 3,26,000 ஆக இருந்ததை விட அதிகமாகும். இதனால் நடப்பு பருவத்தில் மொத்த விதைப்பில் ஏகமாக உயர்வ ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் 27,ஏப்ரல் வரை குஜராத்தில் விதைப்பு 30,196 ஆக இருந்தது 30,616 எக்டாராகியது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் புதிய உளஉந்து சென்னை டெலிவரி 8300, ஆந்திர பாலிஷ் 8350,தெலங்கானாவின் ஆத்மக்கூர் வட்டாரச்சரக்கு 8250, குஜராத்தின் வேராவல், பாட்டன் பகுதியில்

Updated On: May 3, 2026, 8:15 pm
இறக்குமதி பட்டாணியில் திடமாவது நின்றுவிட்டது

ஹைதராபாத் : வியாபாரிகளின் கணிப்புப்படி டாலரை விட ரூபாய் குறைந்துவிட்டதால் இறக்குமதி செலவு அதிகமாவதால் சென்ற வாரம் இறக்குமதி சரக்கு விலையில் திடமாவது நின்றுவிட்டது. ஆனால் கடலை விலையில் குறைவு காரணமாக உள்ளூர் பட்டாணி விலையில் தாக்கம் ஏற்பட்டுவருகிறது. வேளாண் மந்திராலய ரிப்போர்ட்டின்படி நடப்பு ஆண்டு ரபிப்பருவத்திற்காக 12,டிசம்பர் வரை பட்டாணி விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 8,27,000 ஆக இருந்தது 7,92,000 எக்டாரில் நடந்துள்ளது. சென்ற வாரம் கானடாவின் மஞ்சள் பட்டாணி டிசம்பர்-ஜனவரி மாத ஷிப்மெண்ட் கண்டிஷன் 315 டாலர் டன் வரை சி அண்டு எஃப் கூறப்பட்டது. மும்பையில் கானடாவின் இறக்குமதி ரகம் 3725, ரஷ்ய ரகம் 3625, ஹாஜிராவில் கானடா ரகம் 3700, ரஷ்ய ரகம் 3600, முந்தராவில் கானடா ரகம் 3650, ரஷ்ய ரகம் 3600,கல்கத்தாவில் கானடா ரகம் 3850-3900, ரஷ்ய பகுதியில் 3650-3700 ரூபாயாகியது.உத்தரப்பிரதேச மௌராணிப்பூர், உரைய், மஹோபா வட்டாரங்களில் வெள்ளை 3500-4000, பச்சை 3000-7000, மத்தியப் பிரதேச ஜபல்பூரில் வெள்ளை 2700-3165, பச்சை 2000-3200 வரையும் வியாபாரமாகியது.

Updated On: December 22, 2025, 6:14 am
இறக்குமதி மசூர் குறைவு

மும்பை :- வியாபாரிகளின் கணிப்புப்டி நடப்பு ரபிப்பருவத்தில் மசூர் விதைப்பு நிலையாக இருந்ததோடு சாதகமான பருவத்தால் மகசூல் அதிகமாக ஆகலாம் என்று கணித்ததோடு வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் மூலம் விலையை குறைத்து கூறப்படுவதால் சென்ற வாரம் இறக்குமதி மசூர் விலையில் குறைவு ஏற்பட்டது. மேலும் நாட்டு மசூர் விலையில் சற்று ஏற்று, இறக்கம் ஆனபிறகு விலை நிலைத்துவிட்டது .வேளாண் மந்திராலய ரிப்போர்ட்டின்படி நடப்பு ஆண்டு ரபிப் பருவத்திற்காக 12,டிசம்பர் வரை நாட்டில் மசூர் விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 14,57,000 ஆக இருந்தது 14,60,000 எக்டாராகியது. சென்ற வாரம் சர்வதேச மார்க்கெட்டில் கானடா மசூர் டிசம்பர்-ஜனவரி மாத ஷிப்மெண்ட் கண்டிஷனில் 545 டாலர், ஆஸ்திரேலியாவின் 540 டாலர் டன் வரை சி அண்டு எப் கறப்படுகிறது. சென்ற வாரம் மும்பையில் கானடா மசூர் கண்டெயினரில் 50 ரூபாய் குறைந்து 5800, ஹாஜிரா, முந்தரா, காண்டளாவில் 5500-5600, டில்லியில் கானடா ரகம் 5875, கல்கத்தாவில் ஆஸ்திரேலிய ரகம் 5950 -5975, டில்லியில் மத்தியப்பிரதேச வட்டார மசூர் 6625 ரூபாய் வரை வியாபாரமாகியது. உத்தரப்பிரதேச மௌராணிப்பூரில் 5600-6500, உைாயிஸ் 5400-5800, மஹோபாவில் 5400-5859, மத்தியப்பிரதேச மண்டியில் 4500-6100 ரூபாயாகியது.

Updated On: December 22, 2025, 6:13 am
புளிக்கான கிராக்கி குறைவு

ஹைதராபாத் :- வியாபாரிகள் கணிப்புப்படி கர்நாடக குண்டுலூர்பேட் பகுதியில் சென்ற வாரம் 70-80 மூட்டைகள் புதிய புளி சிறிதளவு வரத்தொடங்கி போட் ரகம் 2000-2500 ரூபாய் வரை வியாபாரமாகியது. மேலும் அடுத்த வாரத்திலிருந்து வரத்து உயர வாய்ப்புள்ளது. மேலும் பெல்காவ், மைசூர், செலிக்கேரி பகுதியில் வாரத்திற்கு ஏறக்குறைய 5-6 லாரிகள் ஏசி கிட்டங்கி சரக்கு விற்பனையானதில் பூல்ரகம் உள்ளூரில் 12,000 -13,000, அகமத்நகர் பகுதி சரக்கு 15,000-16,000 வரை வியாபாரமாகி மும்பை, ராய்ச்சூர் பகுதிக்குச்செல்கிறது. ஆந்திர இந்துப்பூர் ஏசி கிட்டங்கியிலிருந்து சென்ற வாரம் 10-12, புங்கனூரிலிருந்து 20-25, சாலூரிலிருந்து 8-9, இதர பகுதி ஏசி கிட்டங்கியிலிருந்து 5-6 லாரிகள் புளி விற்பனையாகியது. இதில் இந்துப்பூர், கரிப்பூல் 18,500-21,000, நடுத்தரம் 17,000-19,000, பி.எப் கரிப்பூல் 17,000- 17,500, நடுத்தரம் 14,000-15,000, நயம் சப்பாத்தி 12,500-13,000, மகாராஷ்டிர பூல் ரகம் 10,000-12,000, நடுத்தரம் 8000-10,200, விதை ரகம் உள்ளூரில் 5500-6000, மகாராஷ்டிர ரகம் 6400-6800 ரூபாய் வரை வியாபாரமாகியது. புங்கனூரில் கரிப்பூல் 17,000-19,000, சாலூரில் நயம் செமி ப்ளவர் 9900-10,000, நடுத்தரம் 7400-7500, ஆவரேஜ் 6000-6200, விதை ரகம் 4300-4800, ஜெகதல்பூரில் சென்ற ஒரே வாரத்தில் 70-80, ராஞ்சி, லோஹர்டாகா மற்றும் சுற்றுவட்டார ஏசி கிட்டங்கி யிலிருந்து 10-12 லாரிகள் விற்பனையானதில் நடப்பு ஆண்டு விதை ரகம் 4500-5000, நிறம் மங்கிய சரக்கு 4000-4500, நடுத்தர பூல்ரகம் 10,500-10,800 ரூபாயாகியது. ஹைதராபாத்தில் 1200 மூட்டைகள் புதியது வரத்தில் ரகவாரியாக வியாபாரமாகியது. மேலும் தின:ரி 1-2 லாரிகள் ஏசி கிட்டங்கி சரக்கு வரத்தில் மகாராஷ்டிர நயம் பூல்ரகம் 13,500-15,000, கர்நாடக பகுதி சரக்கு 12,000-13,500, இந்தூரில் ஒம் பிராண்டு 15,500, நடுத்தர பூல்ரகம் 12,000, விதை ரகம் 6500, உன்ஹேலில் 5-6 லாரிகள் வரத்தில் பூல் ரகம் 11,000, விதை ரகம் 6300 வரை வியாபாரமாகி குஜராத், தமிழ்நாடு பகுதிக்குச்செல்கிறது. மகாராஷ்டிர பார்சியில் மார்ச் மாத சரக்கு 12,000-13,000, ஏப்ரல் மாத சரக்கு 12,000- 12,500, அகமத்நகர் பகுதி ஏசி கிட்டங்கி யிலிருந்து சென்ற ஆண்டு பூல்ரகம் 13,000-13,800, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, பாப்பாரம்பட்டி, தர்மபுரி பகுதியில் கரிப்பூல் விதை ரகம் 7000-7500, நடுத்தரம் 6000-6700, ஏசி சப்பாத்தி 6000-6700, நடுத்தரம் 5000-5700, பாப்பாரம்பட்டி உள்ளூரில் சப்பாத்தி 14,000-14,500, மகாராஷ்டிர ரகம் 15,000-15,500, விதை ரகம் உள்ளூரில் 5500-5700, மகாராஷ்டிர ரகம் 6000-6500, போட் ரகம் உள்ளூரில் 4200-5300, மகாராஷ்டிர ரகம் 5000-5200, திண்டுக்கல், தேனி, கம்பம் பகுதியில் சப்பாத்தி 12,000-13,500, நடுத்தரம் 9500-11,000, விதை நயம் ரகம் 6000-6500 ரூபாயாகியது.

Updated On: December 22, 2025, 6:11 am
இந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு

இந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு மும்பை :- வெளி நாட்டு மார்க்கெட்டில் கடுகு புண்ணாக்குக்கான தேவையில் குறைவு, உலக மார்க் கெட்டில் சோயா புண்ணாக்கு மிகவும் அதிக சப்ளையால் இந்தியாவிலிருந்து புண்ணாக்கு ஏற்றுமதி மீது தாக்கம் ஏற்பட்டது. இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசி யேஷன் கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை நாட்டில் புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 44,90,000 ஆக இருந்தது 12.39 சதம் குறைந்து 39,33,000 டன்களாகியது. இதில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2024 ல் 5,15,000 ஆக இருந்ததை விட 3,30,000 டன்கள் வரை குறைந்தது. மேலும் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை தேவையில் குறைவு காரணமாக இந்தியாவிலிருந்து கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 20,39,000 ஆக இருந்தது 17.53 சதம் குறைந்து 16,82,000 டன்களாகியது. மார்ச்,2024 ல் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 285 டாலர் டன்னாக இருந்தது. அது குறைந்து 270 டாலர் வரை எட்டியபிற/ 17,மார்ச்,2025 அன்று குறைந்து 190 டாலர் டன்னாகியது. ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி :- ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை இந்தியாவிலிருந்து ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 3,39,000 ஆக இருந்தது 21.44 சதம் குறைந்து 2,74,000 டன்களாகியது. டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் :- ஆகஸ்ட்,2023 முதல் ஏற்று மதிக்கு தடை காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் முக்கியமாக கிழக்கிந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் விலை ஓராண்டுக்கு முன்பு 13,500 ஆக இருந்ததை விட குறைந்து 8500 ரூபாய் வரை குவின்டலுக்கு ஆகியது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி :- நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஏற்றுமதி ஏறக்குறைய சென்ற ஆண்டுக்குச்சமானமாக உள்ளது.இதனிடையில் ஜெர்மனி, பிரான்சு நாட்டுக்கான தேவையால் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இதே சமயம் 19,34,000 ஆக இருந்தது 19,40,000 டன்களாகியது. ஆனால் நடப்பு எண்ணெய் ஆண்டில் அக்டோபர்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை உலக மார்க்கெட்டில் மிகவும் அதிக சப்ளையால் இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 13,47,000 ஆக இருந்தது குறைந்து 10,31,000 டன்களாகியது. ஏற்றுமதி விலையில் குறைவு ஏற்பட்டு 380 டாலராக இருந்ததை விட குறைந்து 360 டாலராகியது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி, 2025 ல் தென் கொரியா இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 7,87,000 ஆக இருந்தது குறைந்து 6,14,000 டன்களாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 3,94,000, ஆமணக்கு புண்ணாக்கு 1,66,000,, சோயா புண்ணாக்கு 54,156 டன்கள் வரை ஆகியது. வியட்நாம் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 3,94,000 ஆக இருந்தது குறைந்து 2,21,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 1,87,000, சோயா புண்ணாக்கு 22,208, டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் எக்ஸ்டிராக்ஷன் 11,283 டன்கள், கடலை புண்ணாக்கு 3003 டன்களும் இறக்குமதி செய்தது. தாய்லாந்து இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 6,04,000 ஆக இருந்தது 4,13,000 டன்கள் வரையும் செய்தது. இதில் கடுகு புண்ணாக்கு 3,88,000, சோயா புண்ணாக்கு 15,879, கடலை புண்ணாக்கு 8655 டன்களும், சீ கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஐரோப்பிய நாடு இந்திய சோயா புண்ணாக்கு இறக்குமதியை ஏறக்குறைய 5,95,000 டன்கள் வரை செய்தது. பங்ளாதேஷ் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 7,79,000 ஆக இருந்தது குறைந்து 6,98,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 5,51, 000, சோயா புண்ணாக்கு 1,38,000 டன்களும், கென்யா அக்டோபர்-பிப்ரவரியில் சோயா புண்ணாக்கு இறக்குமதி 1,49,000 டன்களாகியது.

Updated On: March 25, 2025, 6:38 am